ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாளைய(28) தினம் கொழும்பின் சில பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதனை தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, வங்கி வீதி மற்றும் செத்தம் வீதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச கட்டடங்களுக்கும் உள்நுழையவும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles