சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு, பாக்கிஸ்தான் உட்பட 14 நாடுகளை கண்சிமிட்டும் நேரத்தில் சீரிப்பாய்ந்த சுனாமி அலைகள் தாக்கிச் சென்றது.
இந்த அனர்த்தத்தினால் இலங்கையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பெருமளவு பொருட்சேதமும் ஏற்பட்டது.
சுனாமினால் உலகளவில் 2.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இயற்கை பேரழிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவை எப்போதும் மறக்க முடியாத காயங்களை ஆழப்பதியச் செய்கின்றன.
2004 டிசம்பர் 26 ஆம் திகதி காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா, தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது. சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.