இங்கிலாந்தில் மாநகர முதல்வரானார் இலங்கை தமிழர்

பிரிட்டனின் Ipswich நகரின் புதிய மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கைத் தமிழரான இளங்கோ கே.இளவழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் ஆணையாளராக பதவி வகிக்கும் இளங்கோ கே.இளவழகன், Ipswich மாநகராட்சியின் வருடாந்தக் கூட்டத்தில் அதிக வாக்குகளை பெற்று மேயராக இளங்கோ கே.இளவழகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் மேயராக நியமிக்கப்பட்டமைக்கு மிகவும் பெருமைப்படுகிறேன்” என இளங்கோ இளவழகன் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் வேட்புமனுவை முன்மொழிந்த நகராட்சி தலைமை ஆளுநர் நீல் மெக்டொனால்ட், தான் பதவியிலிருக்கும் ஆண்டில் பொதுத் தேர்தல் முடிவை இளங்கோ இளவழகன் அறிவிப்பாரென அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles