இங்கிலாந்து பிரதமருக்கு இரகசியமாக டும்…டும்…டும்…!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது காதலி ஹேரி சைமண்ட்ஸ் இடையே  இரகசியத்திருமணம் நடைபெற்றது.

இங்கிலாந்து பிரதமராக செயல்பட்டு வருபவர் போரிஸ் ஜான்சன்(56). இவர் தனது காதலியான ஹேரி சைமண்ட்ஸ் (33) உடன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு குழந்தை ஒன்று பிறந்தது. இதனை தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜான்சன் – ஹேரி சைமண்ட்ஸ் தம்பதி அறிவித்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது காதலி ஹேரி சைமண்ட்ஸ் இடையே இன்று ரகசியத்திருமணம் நடைபெற்றது என தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் உள்ள ஒரு கிருஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மிக சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. ஜான்சனுக்கு இது 3-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. காதலி ஹேரி சைமண்ட்ஸை திருமணம் செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles