‘இடைக்கால அரசு’ – அரசியல் களத்தில் இன்றும் பேச்சு!

சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு 11 கட்சிகளின் கூட்டணி அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்படி யோசனை சம்பந்தமாக அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சு நடத்தி, தெளிவுபடுத்துவதற்கும் 11 கட்சிகளின் கூட்டணி முடிவெடுத்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பதவி விலகாவிட்டால் – புதிய பிரதமரை நியமிக்க ஜனாதிபதி முன்வராவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles