இது லொக்டவுன் அல்ல! ஆனால் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்து போயுள்ள நிலையில், அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் வரும் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இது லொக்டவுன் அல்ல என்றும் 10ஆம் திகதி வரை வீடுகளில் இருந்து பணிகளை முன்னெடுக்கலாம் என்றும், கடைகள், பாமசிகள் திறந்திருக்கும் என்றும் ஜூலை 10ஆம் திகதிகுப் பின்னர் நாடு வழமைபோல் இயங்கும் என்றும் விசேட அமைச்சரவையின் பின்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Related Articles

Latest Articles