இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்காக குரல் கொடுக்கும் ஸ்தாபனம். அதை எவராலும் மறக்க முடியாது மறுக்கவும் முடியாது. இதொ.கா என்பது வெறும் பேச்சு அல்ல அது மக்களின் மூச்சு – என்று இ.தொ.கா வின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சக்திவேல் தெரிவித்துள்ளார்.
சென்கிளயர், மெரயா, மட்டுக்கலை பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.
” அன்று மக்கள் குடியிரிமையின்றி நாடற்றவர்களாக காணப்பட்டபோது குடியுரிமை, வாக்குரிமை வாங்கி கொடுத்து தலைநிமிர்ந்து நடக்க வைத்தது இ.தொ.கா. அதை வைத்துக்கொண்டு நேற்று மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் இ.தொ.காவை விமர்சனம் செய்கின்றனர்.
80 வருடமாக மக்களுக்கு இ.தொ.கா செய்ததை பட்டியலிட்டால் அது பல பாகங்களை கொண்ட புத்தமாக வெளிவரும்.அதை தெரியாதவர்கள் என்ன செய்தார்களென கேட்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் ஏதோ விடயத்தை இ.தொ.கா செய்துள்து.அதனால் தான் மக்கள் இன்றும் இ.தொ.காவுடன் காணப்படுகின்றனர்.இ.தொ.கா என்பது வெறும் பேச்சு அல்ல அது மக்களின் மூச்சு.” – என்றார்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்