இந்தியாவில் தொடர்ந்து 5ஆவது நாளாகக் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்குப் புதிதாக சுமார் 3 லட்சத்து 53 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனாவால் சுமார் 2 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 17 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்று காலையில் தளர்த்தப்படவிருந்த முடக்கநிலை, மேலும் 1 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 மில்லியன் பேரைக்கொண்ட அந்த நகரம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை மேற்கொள்ளும் மூவரில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்படுகிறது.
டில்லியிலும் மற்றப் பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பியுள்ளனர்.எனவே, புதிய நோயாளிகளை அவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.










