மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் லயன் குடியிருப்பொன்று பகுதியளவு இடிந்தும், ஏனைய பகுதி இடிந்துவிழும் அபாயத்தில் காணப்படுகின்றபோதிலும் அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபைகக்குட்பட்ட ஆர்.பி.கே. பிளான்டேசனுக்கு உரித்தான அப்புகஸ்தனை தோட்டத்திலேயே திபட்டன் பிரிவு அமைந்துள்ளது. அங்கு 14 லயன் அறைகள் காணப்படுகின்றன. எனினும், தற்போது 8 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்துவருகின்றன.
கடந்த வருடம் பெய்த அடைமழையால் குறித்த லயன் குடியிருப்பில் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. எனினும், எவருக்கும் காயம் எவுதும் ஏற்படவில்லை. இப்பகுதி இன்னும் புனரமைக்கப்படாததால் காடாகியுள்ளது.
இம்மக்களுக்கு தனி வீடுகள் வழங்கப்படும் எனக்கூறி கடந்த ஆட்சியின்போது அடிக்கல்லும் நடப்பட்டது. எனினும், நிர்மாணப்பணிகள் இடம்பெறவில்லை. மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
எனவே, புதிய அரசாங்கமாவது தம்மை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்