37 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிங்கப்பூர் விநியோகஸ்தர் ஒருவரால் இந்த எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் .ஒல்கா தெரிவித்தார்.
பெட்ரோலை ஏற்றிய கப்பல் இந்தியாவிலிருந்து இன்று பயணத்தை ஆரம்பித்திருந்தது.
30 நாட்களுக்கு தேவையான பெட்ரோலை விநியோகிப்பதற்காக கடன் கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கூறினார்.
இதேவேளை, 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் நாளை (20) நாட்டை வந்தடையவுள்ளது.
இந்த கப்பலுக்கு செலுத்துவதற்கான கட்டணத்தை எரிசக்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கிக்கு ரூபாவினால் செலுத்தியுள்ளது.
