இலங்கையில் தங்கத்தின் விலை என்றுமில்லாதவாறு இன்று 18ஆம் திகதி அதிகரித்துள்ளது.
இதன்படி 22 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக செட்டியார் தெரு தங்க நகை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் விலை உயர்வுக்கு டொலர் பற்றாக்குறையும் காரணம் எனவும் ரஷ்யா யுக்ரேன் யுத்த நிலைமையும் எதிர்பாராத தங்க விலை அதிகரிப்புக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2000 டொர்கள் வரை அதிகரித்துள்ளது.
