2ஆம் இணைப்பு – விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
நாரம்மல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாரம்மல விகாரைக்கு அருகில் உள்ள வளைவு பகுதியிலேயே இன்று காலை 6.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆட்டோவொன்றும், லொறியும் மோதியில் ஆட்டோவில் பயணித்த நால்வரில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
