பாகிஸ்தான் முன்ளாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டின் நீதிமன்றமொன்று இன்று அனுமதி வழங்கியது.
அல் காதிர் நம்பிக்கை நிதியம் தொட்ரபான வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரிப்பதற்காகவே அவர் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளார்.
நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இம்ரான் கானை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என தரப்பு சட்டத்தரணிகள் கோரினர்.
இதற்கு இம்ரான் கானின் சட்டத்தரணி தெரிவிப்பு தெரிவித்தார்.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, பிடியாணை ஆவணம் அவருக்கு காண்பிக்கப்பட்டது என தேசிய பொறுப்புல் கூறல் பணியகத்தின் (என்ஏபி) சட்டத்தரணி கூறினார்.
ஆனால், இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது அவருக்குப் பிடியாணை காண்பிக்கப்படவில்லை எனவும் என்ஏபி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அந்த ஆவணம் காண்பிக்கப்பட்டது எனவும் இம்ரான் கானின் சட்டத்தரணி கூறினார்.
இறுதியில் இம்ரான் கானை 8 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு பொறுப்புக்கூரல் பணியகத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அனுமதியளிக்கப்பட்டவர்கள் மாத்திரமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என இஸ்லாமாபாத் பொலிஸார் அறிவித்திருந்தனர். நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள வீதிகள் மூடப்பட்டிருந்தன.










