இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட கிரிபத்கல தமிழ் வித்தியாலய மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ‘தூரிகையின் மொழி’ எனும் தலைப்பிலான சித்திரக் கண்காட்சி, இன்று (31.07.2026) வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் S. சுரேஷ் உமாநாத் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக நிவித்திகல வலயக் கல்விப் பணிமனையின் தமிழ் மொழிப் பிரதித் கல்விப் பணிப்பாளர் திருமதி சகுந்தலா கலந்துகொண்டார்.
மேலும், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் கலைப் படைப்புகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.










