இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தம் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கலவானை, எலபாத்த, குருவிட்ட மற்றும் எஹலியகொடை ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
