இரு தடவைகள் T- 20 உலகக்கிண்ணம் வென்ற மே. தீவுகள் அணி ‘அவுட்’! அயர்லாந்து அணி அதிரடி!!

இரு தடவைகள் ரி – 20 உலகக்கிண்ணம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, ரி – 20 உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.

ரி – 20 உலகக்கிணண தகுதிச்சுற்று போட்டியில் குழு பி பிரிவில் இன்று மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி,முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கைய்ல் மேயர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் எவின் லிவிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் தலா 13 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய பிராண்டன் கிங் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். ஓடின் ஸ்மித்தும் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களைக் குவித்தது.  பின்னர் 147  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரரர்களாக பால் ஸ்டிர்லிங் ,ஆண்டி பால்பிர்னி ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் பந்துகளை சிக்ஸர்,பவுண்டருக்கு பறக்க விட்டனர்.இதனால் அயர்லாந்து அணியின் ஓட்ட விகிதம் அதிரடியாக உயர்ந்தது. 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ஓட்டங்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய ஆண்டி பால்பிர்னி 23 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் லோர்கன் டக்கர் களமிறங்கினார். மறுமுனையில் பால் ஸ்டிர்லிங் அதிரடி அரைசதம் அடித்தார். லோர்கன் டக்கரும் அவரது பங்கிற்கு பவுண்டரி ,சிக்ஸர் பறக்க விட்டார். மேற்கிந்திய தீவுகள்  அணியால் 2வது விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இறுதியில் 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்து அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி,  ரி – 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

Related Articles

Latest Articles