இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் இடைநிறுத்தம்

நுவரெலியா – இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரின் சடலங்கள் மீட்கப்படவில்லை.

இன்று 13.04.2022 இரண்டாவது நாளாகவும் கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதும் ஒரு யுவதியின் சடலமே கண்டு பிடிக்கப்பட்டது. எனினும், இளைஞர் ஒருவரினதும், யுவதி ஒருவரினதும் சடலங்கள் ம் மீட்கப்படவில்லை.

பெய்து வரும் மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இன்று (13.04.2022) மாலை தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதேவேளை நாளைய (14) தினமும் யுவதியையும், இளைஞரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles