கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளையும் (21), நாளை மறுதினமும் (22) தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என்று கொட்டகலை பிரதேச சபை தவிசாளரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
கொவிட் – 19 தடுப்பூசியின் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸை இதுவரை பெறாதவர்களும் இதன்போது தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இந்த வாய்ப்பை தவறவிடவேண்டாம் எனவும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வட்டகொடை மற்றும் தலவாக்கலை பகுதிகளில் உள்ளவர்களுக்கு, தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்திலேயே தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை, போகாவத்தை, ஸ்டொனிகிளிப், மவுண்ட்வேர்னன் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 20 -30 வயது பிரிவினருக்கு செப்டம்பர் 21 ஆம் திகதி காலை 8 மணி முதல் 12 மணிவரை திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
மேலும் – டிரேட்டன், யுலிபீல்ட், குடுஓயா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு செப்டம்பர் 22 ஆம் திகதி காலை 8 மணி முதல் கொட்டகலை தேசிய பாடசாலையில் தடுப்பூசி ஏற்றப்படும்.