இலங்கையில் பஞ்சம் ஏற்படாது – அடித்து கூறுகிறது ஆளுங்கட்சி!

2022 இல் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் அக்குற்றச்சாட்டை ஆளுங்கட்சி நிராகரித்துள்ளது.

” எக்காரணங்களுக்காகவும் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது.” – என ஆளுங்கட்சிநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

” கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதிலும் உற்பத்திப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சவாலாக ஏற்று நாமும் உற்பத்திப் பொருளாதார செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம்.

அதேவேளை, எதிரணியினர் ஆட்சியைப் பிடிப்பதற்கு பதிலாக போலி கருத்துகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றனர்.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles