இவ்வருடம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் வைத்து ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி நேரடி பதிலை வழங்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதே தனது இலக்கு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.