இஸ்ரேல், பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
இஸ்ரேல், #பாலஸ்தீனம் என்ற இரு-நாட்டு (Two state solution) தீர்வை நோக்கி ஐநா பாதுகாப்பு சபை தீர்மானக்கரமாக வர வேண்டும்.
இஸ்ரேல் இந்த தீர்வை முழுமையாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட வேண்டும்.
இஸ்ரேல் என்ற நாட்டை முற்றாக அழித்தொழிக்கும் நிலைப்பாட்டை பாலஸ்தீன் குழுக்கள் கைவிட வேண்டும்.
மிக சிறந்த வான் பாதுகாப்பு கட்டமைப்பு (Air Defense System) தமக்கு உண்டு என்ற இஸ்ரேலின் பெருமிதம் ஒரு மாயை என ஹமாஸின் தாக்குதல் நிரூபித்துள்ளது.
பலஸ்தீன பூமியில் அமைக்கப்பட்டுள்ள
இஸ்ரேலின்
திட்டமிட்ட குடியேற்ற திட்டங்களில் சுமார் 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளார்கள், என்பது இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
நெடுங்காலமாக, இஸ்ரேலின் தாக்குதல்களில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதே வரலாறு.
முதன்முறையாக இஸ்ரேல் பக்கத்தில் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது இஸ்ரேல் திருப்பி அடிக்க தொடங்கி உள்ளது.
