இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சண்டை, உலகப் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே மந்தமடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான சண்டை, பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக நிதியம் கூறியது. எனினும் அதனை இப்போதைக்கு மதிப்பிட முடியாது என்று அது குறிப்பிட்டது.
பொருளாதார நிலவரம் தொடர்பில் மிக தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அந்த நிலவரம் எண்ணெய்ச் சந்தையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் நிதியம் கவனிக்கின்றது.
இஸ்ரேல்–ஹமாஸ் சண்டைக்கு முன்னரே உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாக அறிக்கை வெளியானது. இந்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி 3.0 வீதம் இருக்கும் என்று நிதியம் முன்னுரைத்தது.
2024இல் அந்த வளர்ச்சி 2.9க்குக் குறைய வாய்ப்பிருப்பதாக நிதியம் எச்சரித்தது.
இஸ்ரேல் –ஹமாஸ் சண்டை ஆரம்பித்தபோது உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்தது. ஆனால் எண்ணெய் விநியோகத்துக்கு உடனடி பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதியானதும் அந்த விலை குறைய ஆரம்பித்தது.
