உள்ளக பொறிமுறை : ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு விளக்கமளிக்க தயாராகும் இலங்கை!

பொறுப்பு கூறல் விவகாரத்தில் உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில் செப்டம்பர் மாத பிரேரணை அமைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடனும் கொழும்பு பேச்சு நடத்தவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு வருகின்றார். இந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.

26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருக்க திட்டமிட்டுள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய , வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்ட அரச தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இதன்போதே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைப்புக்கான ஏற்பாடு, புதிய அரசியலமைப்பு, உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி மனித உரிமைகள் ஆணையாளருக்கு எடுத்துரைக்கப்படவுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை உடன்படாது என்பதால் உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும், உறுப்பு நாடுகளிடம் இது பற்றி கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை தரப்பில் கோரப்படவுள்ளது அறியமுடிகின்றது.

இலங்கை தொடர்பான புதிய பிரேரணையொன்று செப்டம்பர் மாத கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு பிரிட்டன் தலைமை வகிக்கவுள்ள நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுடன் இலங்கை பேச்சு நடத்தவுள்ளது.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை, ஊழல்வாதிகளுக்கு எதிரான பாரபட்சமற்ற நடவடிக்கை என்பவற்றின் ஊடாக உள்ளக நீதிப்பொறிமுறை வலுப்படுத்தப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles