ஊர்காவற்துறையில் தீ விபத்து – இரண்டு சகோதரிகள் பலி

ஊர்காவற்துறையில் வீடொன்றின் பின்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 வயது மதிக்கத்தக்க இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 72 மற்றும் 74 வயதுடைய இரு சகோதரிகளே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

சடலங்கள் யாழ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles