தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஊழல் ஒழிப்பு தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளில் முக்கியமானது. இதற்கமையவே ஆசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார்.
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர்,நாடாளுமன்றம்கூடும் முதல் சந்தர்ப்பத்திலேயே நீதி அமைச்சரால் மேற்படி சட்டமூலம் முன்வைக்கப்படும்.
ஊழல் ஒழிப்பையே இளைஞர்கள் கோரினர். போராடினர். எனவே, அவர்களின் கோரிக்கையும் இதன்மூலம் நிறைவேறுகின்றது.” – என்றார்.
