மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவில் உள்ள நோர்வூட் நிவ்வெளி ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆடைத்தொழிற்சாலை இன்று முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆடைத்தொழிற்சாலையும் அது அமைந்துள்ள வளாகமும் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டது. நோர்வூட் பிரதேச சபைத்தலைவரின் ஆலோசனைக்கமைய இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 22 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாளை 260 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்










