எதங்கும் தயங்க வேண்டாம் – மீண்டும் வருவேன் என்கிறார் மஹிந்த

” நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்.”

-என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச, தனது பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்ததன் பின்னர் நேற்று முதல் தடவையாக பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்‌ச, தனது மீள் அரசியல் பிரவேசம் குறித்துதகவல் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் நேற்று பாராளுமன்ற சபை அமர்வுகள் நடைபெற்றன.

மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அரசியல் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருந்தார். எனினும் மீண்டும் அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் நேற்று தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்துக்கு வந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்த ராஜபக்சவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். மஹிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திகள் குறித்தும் வினவியுள்ளனர். “நானும் வீட்டிலிருந்து அந்த செய்திகளைப் பார்த்தேன்.

அவை அப்பட்டமான பொய். நான் நலமாக உள்ளேன். அரசியல் பணிகள் வழக்கம் போல் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்” என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles