எதிரணிகளுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப்படும்

எதிரணிகளுடன் இணைந்து கொழும்பு மாநகரசபையில் ஆட்சி அமைப்போம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொழும்பு மாநகரசபையில் ஆளுங்கட்சிக்கு 48 இடங்களே கிடைத்துள்ளன. எதிரணிகளுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே, எதிரணிகள் ஒன்றிணைந்து கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை நிறுவுவோம்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரை மேயர் வேட்பாளர் ஆக்குவோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles