நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனால் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையிலேயே அந்த தகவலை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.
ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ள போதிலும், அது பாரதூரமான நிலைமையல்ல எனவும் இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மூன்று கோவிட் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் பத்து முதல் பதினைந்து உறுப்பினர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.










