எரிவாயு விலை குறைந்துள்ளதால், தகனசாலைக்கு அறவிடப்படும் கட்டணத்தை ஆயிரத்து 500 ரூபாவால் குறைப்பதற்கு கொட்டகலை பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த கூட்ட அமர்வு சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் நடைபெற்றபோதே, இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
