ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, சாகல ரத்னாயக்க, அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள், சமகால அரசியல் நிலைவரம், எதிர்கால திட்டங்கள் பற்றியெல்லாம் இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளனவாம்.
குறிப்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
அத்துடன், கட்சியை உரிய வகையில் மறுசீரமைக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாம்










