ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிமீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருதானை ‘டெக்னிகல்’ சந்தியில் வைத்தே, பாதுகாப்பு தரப்பினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
