ஒக்டோபர் 12 ஜனாதிபதி தேர்தல்!

ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்று அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரியப்படுத்திவிட்டார், இராஜங்க அமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதும் இது பற்றி ஜனாதிபதி தெரியப்படுத்தினார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பாதீட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலும் சனிக்கிழமை நாளொன்றிலேயே தேர்தல் நடத்தப்படும். அந்தவகையில் ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.

அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles