ஒன்லைன் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

ஒன்லைன் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட 2 சந்தேகநபர்களை கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல்பொருள் அங்காடியொன்றில் பணப்பரிசு வெற்றிகொண்டுள்ளதாக தெரிவித்து சந்தேபர்கள் 180,000 ஆயிரம் ரூபா பண மோசடி செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 07 கையடக்க தொலைபேசிகளும் அவற்றுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 109 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொல்கஹவெல மற்றும் கேகாலை பகுதிகளைச் சேர்ந்த 23, 30 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles