ஒரு ஓவரில் 35 ஓட்டங்கள் – பும்ரா உலக சாதனை!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி முதல் இனிங்ஸில் 416 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணிசார்பில் ரிஷாப் பண்ட் 146 ஓட்டங்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு ஓவரில் 35 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார். முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரைன் லாரா ஓவர் ஒன்றில் 26 ஓட்டங்களை அதிகமாக பெற்றிருந்தார்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா ஓவர் ஒன்றில் 35 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றமை உலக சாதனையாக பதியப்பட்டுள்ளது. இது டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவரில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிக ஓட்டமாக பதிவாகியுள்ளது.

Related Articles

Latest Articles