ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அர்ச்சுனா எம்.பி.

அரச அதிகாரிகளின் கல்வித் தகைமைகளைக் கேள்விக்கு உட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதிவு செய்தனர்.

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோது, அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன்மொழியப்பட்டு, அவை தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

அதன்போது இடையில் குறுக்கிட்டு கேள்விகளைக் கேட்ட அர்ச்சுனா எம்.பி., அவர்களின் கல்வித் தகைமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதனால் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளைச் செவிமடுக்காது தமது விளக்கங்களைக் கூறிச் சென்றனர்.

அதேவேள, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போது,

“அரச அதிகாரிகளைக் கேலி செய்வது போன்றும், அவர்களின் கல்வித் தகைமைகளைக் கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும். அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும்போது, அவர்களை நாங்கள் வரவேற்கத் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், நடைமுறைகளைக் குழப்பி, அத்துமீறி நுழைய முற்பட்டால் கடவுளாக இருந்தாலும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கமாட்டோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles