‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து கலீலுர் ரஹ்மான் விலகல்

ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து கலீலுர் ரஹ்மான் விலகியுள்ளார்.

தமது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செலணி, முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தம் செய்து அவற்றை பாதுகாப்பதற்கு பதிலாக அந்த சட்டங்களை பறித்தெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்வைக்கவுள்ள அறிக்கையில் தம்மால் கையொப்பமிட முடியாது என கலீலுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள 6 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலணியில் இருந்து விலகிய மூன்றாவது முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles