‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தலைமையிலான இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை இலங்கைக்குள் செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து சட்டவரைபை தயாரிப்பதற்காகவும், நிதி அமைச்சால் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து திருத்தங்களை முன்வைப்பதற்காகவுமே இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
மாதம் ஒரு முறை ஜனாதிபதிக்கு இது சம்பந்தமாக அறிக்கை கையளிக்க வேண்டும். 2022 பெப்பரவரி 28 ஆம் திகதிக்குள் இறுதி அறிக்கையை கையளிக்க வேண்டும்.