ஓடும் பஸ்களில் பெண்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்தவர் கைது!

காற்சட்டை பையில் சூட்சுமமான முறையில் கைத்தொலைபேசியை வைத்து பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் அந்தரங்கங்களை வீடியோவில் பதிவு செய்யும் நபரொருவரை பிட்டபெத்தர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீண்ட காற்சட்டையின் அடி பாகத்தில் சூட்சுமமான முறையில் கைத்தொலைபேசியை வைத்து இந்த நபர் பெண்களின் அந்தரங்க பிரதேசங்களை வீடியோவில் பதிவு செய்ததாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிட்டபெத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். சந்தேக நபரை இன்று (10) மொறவக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles