கட்சி முடிவை மாற்ற தயார்!

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரை களமிறக்கும் முடிவை மாற்றுமாறு கட்சி தீர்மானித்தால் அதற்குரிய நடவடிக்கையை எடுப்பதற்கு நான் தயார் – என்று மொட்டு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மஹிந்தவிடம் எழுப்பட்ட கேள்விகளும், அவர் கூறிய பதில்களும் வருமாறு,

கேள்வி – மொட்டு கட்சி நிலைமை எவ்வாறுள்ளது?

பதில் – சிறப்பாக உள்ளது.

கேள்வி – ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தப்படுமா, தனிவழி பயணம் தொடருமா?

பதில் –  கட்சி என்ற அடிப்படையில் தனியே பயணிப்போம். ஜனாதிபதியுடனும் பேசுவோம்.

கேள்வி – தனி வேட்பாளரை மொட்டு கட்சி களமிறக்குமா?
பதில் – ஆம், நிச்சயமாக.

கேள்வி – ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாதா?

பதில்  -இல்லை, அந்த முடிவையே கட்சி எடுத்துள்ளது.

கேள்வி – அப்படியென்றால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்பே இல்லையா?

பதில் – கட்சி முடிவெடுத்து விட்டது. ஆனால் முடிவை மாற்ற வேண்டும் எனக் கட்சி கூறினால் அதனை நான் செய்வேன்.

Related Articles

Latest Articles