கட்டுதுவக்கு வெடித்ததில் முதியவர் பலி!

கிராதுருகொட்ட பகுதியில் உள்ள காட்டு பகுதியில் விலங்குகளை வேட்டையாட கட்டி வைக்கப்பட்டிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளுத்தாராம 7ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சாமிகம மில்லத்தேவ பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக காட்டுப்பகுதி வழியாக சென்ற போது துப்பாக்கி வெடித்ததில் இடது கால் முழங்காலுக்கு கீழ் பலத்த சேதமடைந்து நிலையில் குறித்த நபர் மயங்கிய நிலையில் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, ஆலோசனையின் கிராதுருகொட்டை பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles