ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்குரிய கட்டுப்பணத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று செலுத்தினார்.
சுயாதீன வேட்பாளராகவே அவர் போட்டியிடவுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 10 இற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
