கட்டுப்பாட்டு விலையைமீறி மலையகத்தில் முட்டை விற்பனை

நுகவோர் விவகார அதிகார சபையால் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த போதும் மலையக பகுதியில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, ஹற்றன்,தலவாக்கலை உள்ளிட்ட பகுதிகளில் 60 ரூபா முதல் 65 ரூபா வரை விற்பனை செய்து வருவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டில் பொது மக்கள் நலன் கருதி வெளியிடப்படும் எந்த ஒரு சட்டமும் அல்லது அறிவுறுத்தல்களும் எந்த வர்த்தகரும் பின்பற்றுவதில்லை எனவும் இதற்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளோ பொறுப்பு வாய்ந்த உத்தியோகஸ்தர்களோ நடவடிக்கை எடுப்பதில்லை என பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களுக்கு விலை அதிகரிக்கும் பொது வர்த்தகர்கள் உடன் விலை அதிகரிப்பதாகவும் விலை குறையும் போது விலை குறைப்பு இடம்பெறுவதில்லை.

நாட்டு மக்கள் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வர்த்தக சமூகம் இவ்வாறு பொது மக்களிடமிருந்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் நடந்து கொள்வது மிகவும் மோசமான நிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles