கணவனை பொல்லால் அடித்து கொலை செய்த மனைவி! அவிசாவளையில் பயங்கரம்!!

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவமொன்று அவிசாவளை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் வருகைத் தந்த கணவர், நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மனைவி, கணவரை பொல்லால் தாக்கியுள்ளதை அடுத்து, கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, தனது 8 வயதான மகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்த 27 வயதான மனைவி, அதிகாலை தனது மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தையை ஒப்படைத்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவத்தில் அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன் 

 

Related Articles

Latest Articles