கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் பாரிய இரு மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 08 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இன்று (27) முற்பகல் 11 அரச மரமும், மேலும் ஒரு மரமும் இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளன.
இதனால் லொறிகள், கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட எட்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி தலைமையக பொலிஸார், மாநகர தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் நகர சபையினர் இணைந்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், இந்த அனர்த்தம் காரணமாக அந்த வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டது.