கண்டியில் ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்து ஐஸ் போதைப்பொருள் பாவித்த 3 யுவதிகளுக்கு மறியல்!

கண்டி, பஹிரவகந்த பிரதேசத்தில் ஹோட்டல் அறையொன்றை வாடகைக்குப் பெற்று, ஐஸ் போதைப் பொருள் பாவித்த, யுவதிகள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த யுவதிகள் வட்டப்புலுவ, அம்பிட்டிய மற்றும் ஹற்றன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

ஐஸ்போதை பாவித்துக் கொண்டிருந்த நிலையில், கண்டி பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று முன்தினம் (25) இவர்களைக் கைது செய்தனர்.

மூவாயிரம் ரூபாவைக் கொடுத்து, இவர்கள் ஹோட்டல் அறையை வாடகைக்குப் பெற்றுள்ளமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த யுவதிகள்,அடிக்கடி அப்பிரதேசத்துக்கு வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார், இது குறித்து கவனம் செலுத்தி, சுற்றிவளைப்பு மேற்கொண்டதில்இவர்கள் கைதாகினர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்த யுவதிகள் 25 தொடக்கம் 30 வயதுடையவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

மசாஜ் நிலையமொன்றில் பணியாற்றிய நிலையில், போதைக்கும் இவர்கள் அடிமையாகி இருக்கலாமெனத் தெரிய வருகிறது.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இவர்கள்,மார்ச் (10) வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles