கனேமுல்ல சஞ்சீவ கொலை: தலைமறைவாகியுள்ள செவ்வந்தியை வலை விரித்து தேடும் பொலிஸார்!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாக கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்ய விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலிற்கமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொலையின் பின்னர் அவர் காணாமல் போன நிலையில் பெண் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் அந்தப் பெண் இந்த நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மத்துகமவில் பல இடங்களில் நேற்று சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறி, அந்தப் பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 3 சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்படுவார்கள் என கொழும்பு குற்றப்பிரிவு நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles