கம்பளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார், வெலிகல்ல பகுதியில் விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார்.
அவர் சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
க. யோகா