கம்பளை பகுதியில் மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கம்பளை – நாவலப்பிட்டிய பிரதான வீதியிலுள்ள ‘சொப்ட்லொஜிக்’ தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 30 குடும்பங்கள்வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனத்தில் கடந்த 25 ஆம் திகதி மூவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து நிறுவனத்திலுள்ள மேலும் சிலரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பிரகாரம் நேற்று முன்தினம் மேலும் நால்வருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இந்நிலையிலேயே நேற்று மேலும் 17 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானமை பரிசோதனை அறிக்கைமூலம் தெரியவந்தது.
