வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி மொட்டு கட்சியின் சில உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடவும், கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக கட்சி செயலாளரால் வெளியிடப்படவுள்ளது.
